சாபங்கள் நீங்க எளிய வழிகள்
ஆன்மிகத்தின் படி ஒருவரின் ஜாதகத்தில் சனியும், செவ்வாயும் ஒன்றாக இருந்தால் அல்லது செவ்வாய் இருக்கும் ராசிக்கு 4-வது ராசியில் இருந்தால் அவர்களுக்கு சாபம் இருக்கும். சாபம் என்பது நாம் செய்த பாவ புண்ணியங்களை பொறுத்து அமையும். மற்றவர்களை ஏமாற்றினாலோ அல்லது துன்புறுத்தினாலோ, பாதிக்கப்பட்டவர்கள் விடும் வார்த்தைகள் தான் உங்களுக்கு சாபமாக வரும். இதில் மொத்தமாக 13 வகைகள் உள்ளது. சாபம் வகைகள்: பெண் சாபம் பிரேத சாபம் பிரம்ம சாபம் சர்ப்ப சாபம் பித்ரு சாபம் கோ சாபம் பூமி சாபம் கங்கா சாபம் விருட்ச சாபம் தேவ சாபம் ரிஷி சாபம் முனி சாபம் குலதெய்வ சாபம் பெற்றோர் சாபம்: எந்த சாபம் வாங்கினாலும் பெற்றோர்களின் சாபத்தை மட்டும் வாங்க கூடாது. பெற்றோர்கள் மனவேதனை பட்டு விடும் சாபம் பழிக்கும் என்பது ஐதீகம். நீங்கள் வாழ்க்கையில் பல கஷ்டத்தை அனுபவிக்கலாம். பெற்றோரின் சாபம் நீங்க சண்டிகேஸ்வர சுவாமிக்கு பௌர்ணமிக்கு அடுத்து வரும் பிரதமை திதியில் சாந்தி பரிகாரம் செய்ய வேண்டும். சுமங்கலி சாபம்: சுமங்கலி பெண்ணின் சாபத்தை பெற்றவர்கள் வாழ்க்கையில் தீராத கஷ்ட, நஷ்டங்களை அனுபவிப்பார்கள். இந்த சாபம் நீங்குவதற்கு அதிகார நந்தி...