சாபங்கள் நீங்க எளிய வழிகள்
ஆன்மிகத்தின் படி ஒருவரின் ஜாதகத்தில் சனியும், செவ்வாயும் ஒன்றாக இருந்தால் அல்லது செவ்வாய் இருக்கும் ராசிக்கு 4-வது ராசியில் இருந்தால் அவர்களுக்கு சாபம் இருக்கும்.
சாபம் என்பது நாம் செய்த பாவ புண்ணியங்களை பொறுத்து அமையும். மற்றவர்களை ஏமாற்றினாலோ அல்லது துன்புறுத்தினாலோ, பாதிக்கப்பட்டவர்கள் விடும் வார்த்தைகள் தான் உங்களுக்கு சாபமாக வரும். இதில் மொத்தமாக 13 வகைகள் உள்ளது.
சாபம் வகைகள்:
பெண் சாபம்
பிரேத சாபம்
பிரம்ம சாபம்
சர்ப்ப சாபம்
பித்ரு சாபம்
கோ சாபம்
பூமி சாபம்
கங்கா சாபம்
விருட்ச சாபம்
தேவ சாபம்
ரிஷி சாபம்
முனி சாபம்
குலதெய்வ சாபம்
பெற்றோர் சாபம்:
எந்த சாபம் வாங்கினாலும் பெற்றோர்களின் சாபத்தை மட்டும் வாங்க கூடாது. பெற்றோர்கள் மனவேதனை பட்டு விடும் சாபம் பழிக்கும் என்பது ஐதீகம். நீங்கள் வாழ்க்கையில் பல கஷ்டத்தை அனுபவிக்கலாம்.
பெற்றோரின் சாபம் நீங்க சண்டிகேஸ்வர சுவாமிக்கு பௌர்ணமிக்கு அடுத்து வரும் பிரதமை திதியில் சாந்தி பரிகாரம் செய்ய வேண்டும்.
சுமங்கலி சாபம்:
சுமங்கலி பெண்ணின் சாபத்தை பெற்றவர்கள் வாழ்க்கையில் தீராத கஷ்ட, நஷ்டங்களை அனுபவிப்பார்கள். இந்த சாபம் நீங்குவதற்கு அதிகார நந்தியை திருதியை திதியில் வழிபாடு செய்ய வேண்டும்.
உடன் பிறந்தவர்கள் சாபம்:
சகோதர, சகோதரிகளை ஏமாற்றுவது, பழிவாங்குவது போன்ற காரணங்களால் இந்த சாபம் ஏற்படுகிறது. இந்த சாபம் நீங்க அஷ்டமி திதியில் நந்திகேஸ்வரருக்கு சிறப்பு வழிபாடுகளைச் செய்ய வேண்டும். குறிப்பாக விஸ்வரூப நந்தி மற்றும் திசைமாறிய நந்தியைத் தேர்ந்தெடுத்து வழிபட்டால் எளிதில் சாபம் நீங்கும்.
பிரம்ம சாபம்:
நமக்கு பாடம் கற்பிக்கும் ஆசிரியரை இழிவாக பேசுவது. அவர்கள் கற்பித்ததை மற்றவர்களுக்கு சொல்லி கொடுக்காமல் இருப்பதால் இந்த சாபம் ஏற்படும். பிரம்ம சாபம் நீங்க சப்தமி திதியில் துவார பாலகர்களை வணங்க வேண்டும்.
பித்ரு சாபம்:
முன்னோர்களுக்கு செய்ய வேண்டிய சடங்குகளை சரி வர செய்யாமல் இருப்பதாலும், தாத்தா, பாட்டியை உதாசீனப்படுத்துவதாலும் ஏற்படுகிறது. இந்த சாபத்தால் குடும்ப விருத்தியில் தடை ஏற்படும். பித்ரு சாபம் விலக இறந்த திதியில் தர்ப்பணம் செய்ய வேண்டும். திதி தெரியாதவர்கள் அமாவாசையில் தர்ப்பனம் கொடுக்கலாம்.
சர்ப்ப சாபம்:
பாம்புகளை கொள்வதால் சர்ப்ப சாபம் ஏற்படும். இதனால் திருமண தடையும், திருமணம் நடைபெறுவதற்கு தாமதமும் ஆகும்.
கோ சாபம்:
மாடுகளை துன்புறுத்துவது, கன்றை பசுவிடம் இருந்து பிரிப்பது, தாகத்தில் இருக்கும் பசுவிற்கு தண்ணீர் கொடுக்காமல் இருப்பதால் இந்த சாபம் ஏற்படும். கோ சாபம் இருந்தால் குடும்பத்தில் விருத்தி இருக்காது.
Comments
Post a Comment