Posts

Showing posts from March, 2022

முக்கிய தினங்களில் தவிர்க்க கூடாத காய் கனிகள்..! - வாங்க பாக்கலாம்..!

அமாவாசை, பவுர்ணமி, பிரதோஷம், சிவராத்திரி, சித்ரா பவுர்ணமி, நவராத்திரி, துவாதசி, போன்ற நாட்களில்  சில முக்கிய காய் கனிகளை உணவில் கடைபிடிப்பதால் நமது உடலுக்கு அதிக பலன் கிடைக்கிறது. இந்த நாட்களில்  உள்ள கிரகங்களின் அமைப்புகள் , பூமி, மனிதன் இவற்றிக்கு  இடையே உள்ள ஈர்ப்பு சக்தியானது  மனிதனுக்கு தீமை ஏற்படுத்தாமல் நன்மை செய்யவும் நம் உடல் , உள் உறுப்புக்களை  அதுக்காகத்தான் நமது முன்னோர்கள் இந்தக் குறிப்பிட்ட காய் மற்றும் கனிகளை உணவில் சேர்த்து வந்துள்ளனர். என் மூலம் தீய ஈர்ப்பு சக்தியில் இருந்து நம் உடலையும் மனதையும் பாதுகாத்துக் கொள்ள முடிந்தது. அம்மாவாசைக்கு உகந்த காய்கறிகள்: அம்மாவாசையன்று சேப்பங்கிழங்கு, வாழைக்காய், வாழைத்தண்டு மற்றும் கொடியில் விளைந்த பூசணிக்காய், அரசாணிக்காய் , அவரைக்காய் போன்றவற்றை உணவில் சேர்ப்பது மிகவும் நன்மையளிக்கும்.  தவிர்க்க வேண்டிய காய்கறிகள்  கத்திரிக்காய் மற்றும் வெண்டைக்காய் போன்றவை. பௌர்ணமிக்கு உகந்த காய்கள்: பௌர்ணமி அன்று நிலவு மிகவும் பெரிதாக காட்சிகளுக்கும். அந்நாளில் வெள்ளை, நீல நிற கோடு போட்ட கத்தரிக்காயை உணவில் சேர்த்துக் கொள்வதன் மூளை ஆரோக்கியம்  ...

ஏழு ஜென்ம பாவம் நீங்க இதை பண்ணுங்க..! - மாற்றம் தெரியும்...!

வில்வ மரத்தின் பயன்கள் என்ன என்பதை பார்க்கலாம் வாங்க. பல அபூர்வ பலன்களையும் மருத்துவ குணங்களையும் கொண்ட வில்வ மரத்தின் சிறப்பு அளப்பரியது. மண்ணுலகில் உள்ள ஆன்மாக்களின் பாவங்களைப் போக்கவல்ல ஈசனின் இச்சா, கிரியா, ஞான சக்தி வடிவமாய் ஈசனின் அருளால் பூமியில் தோன்றியது வில்வம். எனவே சிவபெருமானின் தலவிருட்சம் ஆகும் இவ்விருட்சத்தைப் பூசிப்பவர்கள் சகல சித்திகளும் ,நன்மைகளும் அடைவார்கள். வில்வத்தின் பெருமையை சாஸ்திரங்கள் ,புராணங்கள் மிக தெள்ளத் தெளிவாக விளக்கமாகக் கூறுகின்றன. வில்வத்தின் மூன்று இலைகளும் சிவன் ஏந்தியுள்ள திரிசூலத்தின் வடிவத்தையும் இறைவனின் முக்குணங்களையும் குறிப்பனவாகவும் விளங்குகின்றன. ஊழிக்காலத்தில் அனைத்தும் அழியும் என உணர்ந்த வேதங்கள் தாங்கள் அழியாதிருக்க என்னவழி என ஈசனிடம் கேட்க ஈசனும் திருவைகாவூர் ( திருகருகாவூர்) திருத்தலத்தில் வில்வ மரத்தின் வடிவில் நின்று தவம் செய்யமாறு அருளினார். அதன்படி வேதங்களும் வில்வமரங்களாகத் தவமியற்றியதால் திருவைகாவூர் என்ற ஊர் வில்வராண்யம் எனச் சிறப்புப் பெயர் பெற்றது.

கோவிலில் கொடுத்த பூமாலையை என்ன செய்யணும் தெரியுமா..? - வாங்க தெரிஞ்சுக்கலாம்..!

1. கோவிலில் கொடுத்த பூமாலையை வீட்டில் என்ன செய்யவேண்டும் கோவிலில் சுவாமிக்கு அணிவித்து பிரசாதமாக கொடுக்கப்படும் மாலைகளுக்கு நிர்மால்யம் என்று பெயர். இவற்றை மற்ற சுவாமி படங்களுக்கு சாத்தக் கூடாது. மாறாக வீட்டு வாசல் மற்றும் வாகனங்களுக்கு அணிவிக்கலாம் 2. புதிதாக செய்த சுவாமி சிலைக்கு சக்தி இருக்குமா ? தங்கத்தை உருக்கி சிலை செய்தாலும் அதற்கு உடனே சக்தி வந்துவிடாது. ஆன்மீக ரீதியாக அந்த சிலைக்கு சக்தியூட்ட சில விதிமுறைகள் உள்ளன. தானிய வாசம், ஜலவாசம், சயன வாசம் இப்படி சில சடங்குகளை செய்தபின்னேர் சிலைக்கு தெய்வீக சக்தி கிடைக்கும். 3. துர்கை சிலை வடக்கு நோக்கி மட்டும் தான் இருக்க வேண்டுமா ? பெரும்பாலான கோவில்களில் துர்கை அம்மனின் சிலை வடக்கு நோக்கியே இருக்கும். ஆனால் சில கோவில்களில் தெற்கு நோக்கியும் துர்கை சிலை இருக்கும். அந்த கோவிலில் உள்ள துர்கை அம்மனும் மிகவும் பிரசித்தி பெற்று விளங்குகிறார். உதாரணத்திற்கு திருவாரூர் மாவட்டத்தில் உள்ள சோமேஸ்வரர் கோவிலில் துர்கை அம்மன் தெற்கு நக்கியே அருளிபாலிக்கிறார். இந்த கோவிலில் உள்ள துர்கை அம்மனை வணங்கினால் எந்த ஒரு நோயும் நீங்கும் என்பது நம்பிக்கை.

துரதிர்ஷத்தை ஈஸியா தவிர்க்கலாம்..! - இதை தெரியாமல் கூட செய்து விடாதீர்கள்..!

வாஸ்து சாஸ்திரப்படி சில விஷயங்கள் நமக்கு நல்ல பலன்களையும், கெடு பலன்களையும் அளிக்கிறது. வீட்டின் வெளி கட்டமைப்பு, உள்கட்டமைப்பு மட்டுமல்லாமல் நாம் வீட்டில் வைத்திருக்கும் பொருட்களில் கூட வாஸ்து சாஸ்திரம் உண்டு. அதுமட்டுமல்லாமல் அந்த பொருட்களை பயன்படுத்தும் விதத்திலும் சாஸ்திரங்கள் நமக்கு பல்வேறு விஷயங்களை ரகசியமாக குறிப்பிடுகிறது. அந்த வகையில் வீட்டில் நாம் செய்யும் இந்த தவறுகளால் துரதிருஷ்டம் ஏற்பட வாய்ப்புகள் இருப்பதாக வாஸ்து சாஸ்திரம் குறிப்பிட்டுள்ளது என்ன? என்பதைத் தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ள இருக்கிறோம். மருந்து மாத்திரைகள் வீட்டின் பிரதான அறையாக இருக்கும் சமையலறையில் எப்பொழுதும் சமையல் பொருட்களும், பூஜை பொருட்களும் இருக்கலாமே தவிர மருந்து பொருட்கள் கட்டாயம் இருக்கக் கூடாது. மருந்து, மாத்திரைகள், மருந்து சீட்டு போன்ற ஆரோக்கியத்திற்கான விஷயம் என்றாலும், நோயை, வியாதியை எதிர்க்கும் குணம் கொண்டவை.. மருந்து மாத்திரை இல்லா வாழக்கையை தானே விரும்புகிறோம்.. எனவே இது போன்ற எதிர்மறையாக இருக்கும் விஷயங்களை சமையல் அறையில் வைத்தால் வாஸ்து சாஸ்திரப்படி தேவையில்லாத பிரச்சனைகளை ஏற்படுத...

கடன் தொல்லை.. இனி, இல்லை..! - இதை பண்ணுங்க.. கடன் தொல்லை நீங்கும்..!

பொதுவாகவே நம்மில் நிறைய பேருக்கு இந்த மைத்ரேய முகூர்த்தம் பற்றி தெரிந்திருக்கும். இருப்பினும் தெரியாதவர்கள் தெரிந்து கொள்வதற்காக ஒரு சிறிய குறிப்பு. ஒருவருக்கு நிறைய பண பிரச்சனை உள்ளது. நிறைய இடத்தில் கைநீட்டி கடனை வாங்கி விட்டதால், அவரால் கடன் தொகையை திருப்பிக் கொடுக்க முடியாத சூழ்நிலை. இதில் இருந்து எப்படி தப்பிப்பது. நீங்கள் யாரிடம் கடன் வாங்கி இருக்கீங்களா, அந்த நபருக்கு குறிப்பிட்ட இந்த மைத்ரேய முகூர்த்தத்தில் கடன் தொகையில் இருந்து ஒரு சிறிய தொகையை திருப்பிக் கொடுத்து விட்டால், நீங்கள் வாங்கிய கடன் சீக்கிரத்தில் படிப்படியாக குறைந்து விடும் என்பது ஒரு நம்பிக்கை. இது சித்தர்களால் நமக்கு சொல்லி வைக்கப்பட்டுள்ள ஒரு அற்புதமான நேரம். இந்த நேரத்தை தான் மைத்ரேய முகூர்த்தம் என்று சொல்லுவார்கள்.ஒருவேளை நீங்கள் கடன் வாங்கிய நபர், கடன் தொகையை சிறு சிறு தொகையாக திருப்பிப் பெற்றுக் கொள்ள விரும்பவில்லை என்றால், இந்த மைத்ர முகூர்த்த நேரத்தில் ஒரு சிறு தொகையை அவருடைய பெயரைச் சொல்லி ஒரு உண்டியலில் சேர்த்து வரலாம். அப்படி இல்லை என்றால் அவர் பெயரை ஒரு கவரின் மேல் கடன் கொடுத்தவரின் பெயரை எழுதி, அந்த க...

நவகிரகங்கள் - எந்த கிழமையில் வழிபட்டால், என்ன பலன்கள் கிடைக்கும்..? - வாங்க தெரிஞ்சுக்கலாம்..!

மனிதனை ஆட்டிப் படைக்கக் கூடிய இந்த நவகிரகங்கள் இருப்பதை எந்தவித நாகரீக வளர்ச்சியும் இல்லாத அந்த காலத்திலேயே கணிக்கப்பட்டு கூறியுள்ளது நாம் பெருமை கொள்ளக்கூடிய ஒரு விஷயமாக கருதப்படுகிறது. நவகிரகங்கள் இருக்கும் நிலையை வைத்தே ஒரு மனிதன் எப்படிப்பட்ட வாழ்க்கையை வாழ போகிறான்? என்று துல்லியமாக கணித்து விடுபவர்களும் உண்டு. அத்தகைய சக்திகள் கொண்டுள்ள இந்த நவகிரகங்களை எந்தெந்த கிழமையில் வழிபடுவது? எந்தெந்த நன்மைகளை கொடுக்கக் கூடியது? என்பதை தான் நாம் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ள இருக்கிறோம். நவகிரக வழிபாடு நவகிரக வழிபாடு என்பது எவ்வளவு முக்கியம் என்பதை பலரும் அறிவதில்லை. பிரச்சனைக்கு உரிய கிரகங்களை வழிபட்டால் பிரச்சனைக்கு விரைவான நிவாரணம் கண்டுவிடலாம். உங்கள் சுய ஜாதகத்தை ஆராயும் பொழுது எந்த கிரகங்களால் உங்களுக்கு இப்போது இருக்கும் பிரச்சனை நிகழ்ந்து கொண்டிருக்கிறது? என்பதை தெரிந்து கொண்டால், அந்த கிரகத்திற்கு உரிய முறையில் வழிபட்டால் உடனே நிவாரணம் காணலாம். அந்த வகையில் நவ கிரகத்தில் முதல் கிரகமாக இருக்கும் சூரியன் ரொம்பவே வலுவான ஒரு கிரகம் ஆகும். ஞாயிற்றுக் கிழமையில் சூரிய பகவானை வழிபட்டு...