கடன் தொல்லை.. இனி, இல்லை..! - இதை பண்ணுங்க.. கடன் தொல்லை நீங்கும்..!
பொதுவாகவே நம்மில் நிறைய பேருக்கு இந்த மைத்ரேய முகூர்த்தம் பற்றி தெரிந்திருக்கும். இருப்பினும் தெரியாதவர்கள் தெரிந்து கொள்வதற்காக ஒரு சிறிய குறிப்பு. ஒருவருக்கு நிறைய பண பிரச்சனை உள்ளது.
நிறைய இடத்தில் கைநீட்டி கடனை வாங்கி விட்டதால், அவரால் கடன் தொகையை திருப்பிக் கொடுக்க முடியாத சூழ்நிலை. இதில் இருந்து எப்படி தப்பிப்பது. நீங்கள் யாரிடம் கடன் வாங்கி இருக்கீங்களா, அந்த நபருக்கு குறிப்பிட்ட இந்த மைத்ரேய முகூர்த்தத்தில் கடன் தொகையில் இருந்து ஒரு சிறிய தொகையை திருப்பிக் கொடுத்து விட்டால், நீங்கள் வாங்கிய கடன் சீக்கிரத்தில் படிப்படியாக குறைந்து விடும் என்பது ஒரு நம்பிக்கை.
இது சித்தர்களால் நமக்கு சொல்லி வைக்கப்பட்டுள்ள ஒரு அற்புதமான நேரம். இந்த நேரத்தை தான் மைத்ரேய முகூர்த்தம் என்று சொல்லுவார்கள்.ஒருவேளை நீங்கள் கடன் வாங்கிய நபர், கடன் தொகையை சிறு சிறு தொகையாக திருப்பிப் பெற்றுக் கொள்ள விரும்பவில்லை என்றால், இந்த மைத்ர முகூர்த்த நேரத்தில் ஒரு சிறு தொகையை அவருடைய பெயரைச் சொல்லி ஒரு உண்டியலில் சேர்த்து வரலாம்.
அப்படி இல்லை என்றால் அவர் பெயரை ஒரு கவரின் மேல் கடன் கொடுத்தவரின் பெயரை எழுதி, அந்த கவருக்குள் உங்களுடைய பணத் தொகையை குறிப்பிட்ட இந்த நேரத்தில் போட்டு வரலாம். அதாவது அவர் கையில் கொடுக்கவில்லை.
அவர் பெயர் எழுதிய கவரில் அல்லது உண்டியலில் ஒரு சிறு தொகையை வைக்கப் போகிறீர்கள். இது அவருக்கு கடன் தொகையை திருப்பிக் கொடுப்பதற்கு சமமாக கருதப்படுகிறது. அவ்வளவு தான்.
கடன் கொடுத்தவரை எக்காரணம் கொண்டும் தூற்றுதல் தவறு. அதனை ஒரு போதும் செய்யாதீர்கள். நம்முடைய ஆசைக்கோ, அவசரத்திற்கோ தன்னுடைய பணத்தை நமக்கு கொடுத்து உதவியவர். அதான் வட்டி வாங்குறார்ல.. சும்மாவா குடுக்குறாரு.. என்ற எண்ணம் வேண்டாம். அதனால், கடன் கொடுத்தவரை எக்காரணம் கொண்டு தூற்றாதீர்கள். அது பாவமும் கூட… எனவே, முடிந்த வரை கடனை திருப்பி செலுத்துவதில் கவனம் செலுத்துங்கள்.
உங்களுடைய ராசிக்கு ஏற்ற பொதுவான மைத்ரேய முகூர்த்த நேரம் எது என்பதை கீழே கொடுத்துள்ளோம்.
- மேஷம்: வியாழக்கிழமை காலை 9:00 – 10.30
- ரிஷபம்: வெள்ளிக்கிழமை காலை 8.00 – 10.30
- மிதுனம்: புதன் கிழமை காலை 7:30 – 9.00
- கடகம்: திங்கட்கிழமை மாலை 4:30 – 6:00
- சிம்மம்: ஞாயிற்றுக்கிழமை காலை 11:00 – 12.30
- கன்னி: வெள்ளிக்கிழமை மாலை 5:00 – 6:30
- துலாம்: சனிக்கிழமை காலை 10:30 – 12:00
- விருச்சிகம்: வியாழக்கிழமை மாலை 3:00 – 5:30
- தனுசு: செவ்வாய்க்கிழமை காலை 10:30 – 12:00
- மகரம்: சனிக்கிழமை காலை 8:00 – 10:30
- கும்பம்: திங்கட்கிழமை மாலை 3:00 – 5:30
- மீனம்: வியாழக்கிழமை காலை 3:00 – 10:30
குறிப்பு : செவ்வாய் கிழமை, வெள்ளிகிழமை பிறருக்கு பணம் கொடுக்ககூடாது என்ற விதி இதற்கு பொருந்தாது. நீங்கள் உங்கள் கடனை திரும்ப செலுத்துகிறீர்கள் அவ்வளவு தான்.
Comments
Post a Comment