ஏழு ஜென்ம பாவம் நீங்க இதை பண்ணுங்க..! - மாற்றம் தெரியும்...!

வில்வ மரத்தின் பயன்கள் என்ன என்பதை பார்க்கலாம் வாங்க. பல அபூர்வ பலன்களையும் மருத்துவ குணங்களையும் கொண்ட வில்வ மரத்தின் சிறப்பு அளப்பரியது. மண்ணுலகில் உள்ள ஆன்மாக்களின் பாவங்களைப் போக்கவல்ல ஈசனின் இச்சா, கிரியா, ஞான சக்தி வடிவமாய் ஈசனின் அருளால் பூமியில் தோன்றியது வில்வம்.

எனவே சிவபெருமானின் தலவிருட்சம் ஆகும் இவ்விருட்சத்தைப் பூசிப்பவர்கள் சகல சித்திகளும் ,நன்மைகளும் அடைவார்கள். வில்வத்தின் பெருமையை சாஸ்திரங்கள் ,புராணங்கள் மிக தெள்ளத் தெளிவாக விளக்கமாகக் கூறுகின்றன.

வில்வத்தின் மூன்று இலைகளும் சிவன் ஏந்தியுள்ள திரிசூலத்தின் வடிவத்தையும் இறைவனின் முக்குணங்களையும் குறிப்பனவாகவும் விளங்குகின்றன. ஊழிக்காலத்தில் அனைத்தும் அழியும் என உணர்ந்த வேதங்கள் தாங்கள் அழியாதிருக்க என்னவழி என ஈசனிடம் கேட்க ஈசனும் திருவைகாவூர் ( திருகருகாவூர்) திருத்தலத்தில் வில்வ மரத்தின் வடிவில் நின்று தவம் செய்யமாறு அருளினார்.

அதன்படி வேதங்களும் வில்வமரங்களாகத் தவமியற்றியதால் திருவைகாவூர் என்ற ஊர் வில்வராண்யம் எனச் சிறப்புப் பெயர் பெற்றது.

Comments

Popular posts from this blog

சந்திர கிரகணத்தின் போது செய்யக்கூடாத செயல்கள்.

கண் திருஷ்டி போக சில வழிகள்.

வீட்டில் எதிர்மறை ஆற்றல்கள் உள்ளதா..? - தீய சக்திகள் நீங்க சுலபமான பரிகாரம்..!