சந்திர கிரகணத்தின் போது செய்யக்கூடாத செயல்கள்.
சூரியன் பூமி சந்திரன் மூன்றும் ஒரே நேர்கோட்டில் வரும்போது கிரகணங்கள் ஏற்படுகின்றன .இதில் சந்திரன் மறைக்கப்படும் போது சந்திர கிரகணம் சூரியன் மறைக்கப்படும் போது சூரிய கிரகணம் நிகழ்கிறது .
பௌர்ணமி தினத்தன்று சந்திர கிரகணம் அமாவாசை தினத்தன்று சூரிய கிரகணமும் சந்திர கிரகம் என்பது நிலா பூமியின் பின்னால் கடந்து செல்லும்போது பூமியானது சூரியனின் கதிர்களை நிலவின் மீது படுவதில் இருந்து மறைந்து விடுவதால் ஏற்படுவதாகும்.
சந்திர கிரகணம் முழுமையாக ஏற்பட்டால் பூரண சந்திர கிரகணம் என்றும் அரைகுறையாக ஏற்பட்ட பார்சுவ சந்திர கிரகணம் என்றும் அழைக்கப்படுகிறது.
சூரிய சந்திர கிரகணம் நிகழும்போது ராகுவின் பிடியில் இருந்தால் ராகு கிரகஸ்தம் என்றும் கேதுவின் பிடியில் இருந்தால் கிரகஸ்தம் என்றும் அழைக்கப்படுகிறது. கிரகணம் எல்லா நாடுகளிலும் ஒரே நேரத்தில் தென்படாது .மாறாக வெவ்வேறு நேரங்களில் தென்படும் கிரகணத்தின்போது புவியின் மேற்பரப்பில் வெளிச்சம் குறைவதை காணலாம்.
சந்திர கிரகணம் அன்று என்ன செய்யலாம் என்ன செய்யக்கூடாது என்பதை பற்றி இப்போது கூறுகிறேன். கிரகணம் தொடங்குவதற்கு 2 மணி நேரத்துக்கு முன்பாகவே எவ்வித உணவும் உட்கொள்ளக்கூடாது. கர்ப்பிணி பெண்கள் வீட்டை விட்டு வெளியே போகக்கூடாது ஆலயங்கள் அனைத்தும் மூடி இருக்க வேண்டும்.
கிரகண நேரத்தில் ஆலய தரிசனம் கூடாது செய்து வைத்திருக்கும் உணவுகளில் தர்ப்பை புல்லை போட்டு வைக்கவேண்டும். .கிரகணத்தின் போது நவகிரக துதியை பாராயணம் செய்யலாம். அதுபோலவே சந்திரனையும் பாராயணம் செய்யலாம் .
கிரகணம் விடும் போது அதாவது கிரகணம் முழுவதும் முடிந்து ஸ்நானம் செய்துவிட்டு ஆலய தரிசனம் மேற்கொள்ள வேண்டும். ஆலய தரிசனம் செய்துவிட்டு தீபம் ஏற்றி வழிபட்டால் கடன் தொல்லையில் இருந்து விடுதலை பெறலாம்.
கிரகணம் முடிந்ததும் பித்ருக்களுக்கு தர்ப்பணம் செய்வது நல்லது. ஆலயதரிசனம் மேற்கொண்ட பிறகே உணவு உட்கொள்ள வேண்டும் சந்திர கிரகண காலத்தில் வீட்டில் இருந்தபடியே இறைவனை பாராயணம் செய்வது நல்ல பலன்களைக் கொடுக்கும்.
கிரகணம் முடியும் வரை உணவு உண்ணக்கூடாது சந்திரனுடைய கதிர்வீச்சுக்கள் நம்மீது படும்போது அது உடலிலும் நம் உணவிலும் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால் உணவு தவிர்க்கப்படுகிறது.
பெண்கள் மாலைநேரத்தில் தலையில் கிரகணத்தன்று பூவை வைத்துக் கொள்வதை தவிர்ப்பது மிகவும் நல்லது. கிரகண சமயத்தில் கர்ப்பம் தரித்தால் குழந்தை குறையுடன் பிறக்கும் என்பது ஐதீகம்.
Comments
Post a Comment