கடன் பிரச்சனையை தீர்க்கும் பரிகாரங்கள்.
இன்று உள்ள மனிதர்களுக்கு கடன் தொல்லை மிகவும் அதிகமாக உள்ளது. கடன் வாங்கும்போது மிகவும் ஆசையோடு வாங்கிவிட்டு கடனை கட்டும் போது சிலர் திணறி வருகிறார்கள். அப்படி கடன் அதிகமாக இருப்பவர்கள் எந்த கடவுளை வணங்கினால் கடனை எளிதில் கட்டலாம் என்பதை இக்கட்டுரையில் பார்க்கலாம்.
கடன் பிரச்சனைகள் தீர வழிபட வேண்டிய தெய்வங்கள் எது என்று பார்த்தால் சக்தி வாய்ந்த லட்சுமி நரசிம்ம பெருமாளை பவுர்ணமி நாளில் பிரதோச காலத்தில் சுவாதி நட்சத்திரத்தில் பால், இளநீர்,பன்னீர், தேன், மஞ்சள், சந்தனம், திருமஞ்சனப் பொடி, பச்சரிசி மாவு போன்ற அபிஷேகப் பொருட்களைக் கொண்டு அபிஷேகம் செய்தும் துளிசி மாலை சாத்தி வழிபடலாம்.
இந்த வழிபாட்டால் தீராத கடன் தொல்லைகள் தீரும் மனச்சங்கடங்கள் விலகும் பதவி உயர்வு கிடைக்கும். வெளிநாடு செல்ல வாய்ப்பு ஏற்படும் ,கடன் தொல்லைக்கு குறிப்பாக செவ்வாய் கிழமை அன்று வழிபாடு செய்ய சொல்லப்படுகிறது. அதனால் செவ்வாய்க்கிழமைகளில் விரதம் இருந்து அருகில் உள்ள முருகன் சன்னதியில் மாலை வேளையில் 12 முறை பிரதட்சணம் செய்து நெய் தீபமேற்றி வழிபட்டால் கடன் தொல்லை நீங்கும். முக்கியமாக கிருத்திகை தினத்தன்று முருகப்பெருமானை விரதமிருந்து தரிசித்தால் கடன்கள் தீரும்.
எல்லாவித கடன்களும் தீர என்ன பரிகாரம் என்று இப்போது பார்க்கலாம். தினமும் காலையில் யோகநரசிம்மர் அல்லது லக்ஷ்மிநரசிம்மர் படத்தின் முன் அகலில் நெய் அல்லது நல்லெண்ணெய் தீபம் ஏற்றி ருண விமோசன நரசிம்ம ஸ்தோத்திரம் ஆறு எட்டு மடங்குகளாக தினமும் பாராயணம் செய்ய கடன் அடைபடும்.
கடனை செவ்வாய்க்கிழமை அன்று திருப்பிச் செலுத்துவது உகந்தது. முக்கியமாக செவ்வாய் சனிக் கிழமைகளில் கடன் வாங்கக்கூடாது ,இது தவிர மந்த்ர ராஜபத ஸ்தோத்திரம் தினமும் காலை மாலை பாராயணம் செய்தல் நல்லது. எனக்கு கடன் பிரச்சனை இல்லை எதிர்காலத்தில் இந்த பிரச்சனை வரக்கூடாது என்று நினைப்பவர்கள் தினமும் ஒரு முறை இதனைப் படித்து வந்தால் நிச்சயம் பலன் உண்டு.
Comments
Post a Comment