காகத்திற்கு உணவு அளிப்பது நல்லதா?

காகத்திற்கு உணவு வைப்பதால் மூன்று விதமான நன்மைகள் கிடைக்கும். இந்த காகம் சனீஸ்வரருக்குரிய வாகனம். எமலோகத்தின் வாசலில் இருக்கும் எமனின் தூதுவன் என்றும் சொல்லப்படுகிறது.  

நாம் உணவு உண்ணும் முன் காகத்துக்கு ஒரு பிடி உணவு வைக்க வேண்டும் என முன்னோர்கள் கூறியுள்ளார். அதற்கு காரணம் நம்முடைய முன்னோர்கள் இறந்த பிறகு அவருடைய ஆன்மா அவர்கள் குடும்பத்தையும், தான் வசித்த இடத்தைத் தேடி வரும் என்பது நம்பிக்கை.

அப்போது நேரடியாக வராமல் காகத்தின் ரூபத்தில் வருவதாக கூறப்படுகிறது. நம் முன்னோர்களை நினைத்து தினமும் ஒரு பிடி சாதம் காக்கைக்கு வைக்க வேண்டும். அவ்வாறு முடியாவிட்டால் அமாவாசை, மஹாளய அமாவாசை, தை அமாவாசை போன்ற நாட்களில் இறந்து போன முன்னோர்களின் பெயர்களைச் சொல்லி அவர்களுக்கு எள்ளும் தண்ணியும் வைத்து திதி கொடுக்க வேண்டும்.

 அப்போதுதான் அவர்கள் மனம் குளிர்வதோடு வயிறும் குளிர்ந்து நம்மை ஆசிர்வாதம் செய்வார்கள். நாம் முன்னேற்றத்திற்கும் முன்னோர்களின் ஆசி மிகவும் முக்கியம். நாம் இவ்வுலகில் அமைதியாக சந்தோஷமாக நிம்மதியாக வாழ முடிகிறது என்றால் அதற்கு நம் முன்னோரும் காரணம்.

எனவே அவருக்கு நன்றி தெரிவிக்கும் பொருட்டு காகத்திற்கு உணவிட வேண்டும். காகத்திற்கு உணவிடும் பழக்கத்தினால் கணவன் மனைவி ஒற்றுமை வளர்ந்து குடும்பத்தில் எப்போதும் அமைதி நிலைக்கும். காகம் சனீஸ்வரனின் வாகனம் என்பதால் காகத்திற்கு உணவளிப்பதன் மூலம் சனி பகவான் நமக்கு  கொடுக்கும் கெடு பலன்களிலிருந்து விடுபடலாம். 

இறைவனின் பரிபூரண அன்பையும் அருளையும் பெறலாம். ஏழரைச்சனி நடைபெறுகின்ற காலங்களில் காகத்திற்கு எள் கலந்த சாதம் வைப்பது மூலம் ஏழரைச்சனியின் தாக்கம் சக்தி குறையும்.

சுற்றுவட்டாரத்தில் ஏதேனும் பூச்சிகள் இறந்து கிடந்தால் அவற்றை அப்புறப்படுத்தும் பணியை காகம் செய்கிறது. இதனால் நோய்கள் நம்மை தாக்காது இருக்க இது உதவுகிறது.

உணவளிக்கும் போது தன் கூட்டத்தை அழைத்து வந்து உணவை பகிர்ந்து உண்பது இதை பார்க்கும்போது நாம் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்ற தத்துவத்தை உணர்த்துகிறது. காகத்திற்கு உணவு வைப்பதால் முன்னோர்களின் ஆசி பரிபூரணமாக கிடைப்பதோடு சுற்றுப்புறமும் சுகாதாரமாக இருக்கும். சனீஸ்வரனின் அருளும் கிடைக்கும். காகத்துக்கு உணவு அளிப்பதால் சனிபகவானுக்கு மகிழ்ச்சி ஏற்படும்.

Comments

Popular posts from this blog

சந்திர கிரகணத்தின் போது செய்யக்கூடாத செயல்கள்.

" அஸ்வினி முதல் மகம் வரை இந்த தொழில் சூப்பரா செட் ஆகுமாம்..!" - அது பற்றி பார்க்கலாமா..!

படுக்கை அறையில் ஜன்னல்கள் வாஸ்து முறையில் எங்கு வைப்பது நல்லது.