கண் திருஷ்டி போக சில வழிகள்.
திருஷ்டி என்பது இல்லாதவன் இருப்பவனைப் பார்த்து பெருமூச்சு விடுவதும், ஏக்கப்பார்வை பார்ப்பதும் கண்ணால் கண்டு பொறாமை கொள்வதுமே கண்திருஷ்டி எனப்படும்.
திருஷ்டி யை நீங்கும் வழிகள்
எலுமிச்சம் பழத்தினை இரண்டாக வெட்டி அதில் குங்குமம் தடவி வருவோர் கண்பார்வை படும் படி வைக்க வேண்டும். கடை மூடும் சமயம் அதை எடுத்து தலையை சுற்றி இட வலமாக மாற்றி எறியுங்கள். திருஷ்டி கழியும்.
வீட்டில் ஒரு எலுமிச்சை பழத்தில் கற்பூரம் வைத்து சுற்றி இட வலமாக மாற்றி சுத்தி எறிவதால், தீய சக்திகளின் பாதிப்புகளைநெருங்க விடாது.
கிராமங்களில் கண்திருஷ்டியை கழிக்க உப்புக்கல்கொஞ்சம் எடுத்து மூன்று முறை மனிதன் தலையை சுற்றி ஓடும் தண்ணீரில் போடுவார்கள்.
குடும்பத்தில் இருக்கும் அனைவரும் தோஷம் நீங்க கொஞ்சம் கடுகு உப்பு மிளகாய் எல்லாம் சேர்த்து கிழக்கு பார்த்து அமர்ந்து மூன்று முறை சுற்றி எரியும் விறகு அடுப்பில் போட வேண்டும். இது கண் திருஷ்டியை போக்கும் இதை செவ்வாய்க்கிழமை அல்லது ஞாயிற்றுக்கிழமையில் குறிப்பாக செய்வார்கள்.
வீட்டினுள் கெட்ட சத்திகள் நுழையாமல் தடுக்கவும், கெட்ட எண்ணம் உடைய மனிதர்களின் தாக்கம் பாதிக்காமல் இருக்கவும் கண்திருஷ்டி நீங்க வீட்டு வாசலில் பூசணிக்காயை கட்டித் தொங்க விடுவார்கள்.
வாசலுக்கு மேலே ஒரு எலுமிச்சம்பழம் 5 பச்சைமிளகாய் என மாறி மாறி கயிற்றில் கோர்த்து கட்டலாம். இதனை செவ்வாய் கிழமைகளில் மட்டும் செய்வதால் நமக்கு கண் திருஷ்டி நீங்கும்.
கல்லடி பட்டாலும் கண்ணடி படக்கூடாது என்பது பெரியவர்களின் வாக்கு. எனவே வாரம் ஒருமுறை கல் உப்பை குளிக்கும் நீரில் கலந்து குளித்து வர திருஷ்டியால் ஏற்படும் உடல் அசதி சோம்பல் நீக்கும்.
குறிப்பாக அவரவர் பிறந்த கிழமை அல்லது செவ்வாய்க்கிழமையில் இவ்வாறு செய்வதால் நமக்கு திருஷ்டியால் ஏற்படும் தோஷங்கள் நீங்கும்.
திருஷ்டி நீங்க கண் திருஷ்டி, முள் அதிகம் உள்ள செடிகள் மஞ்சள் ரோஜா செடி ஆகியவற்றை வீட்டில் வளர்க்கலாம்.
ஆகாச-கருடன்-கிழங்கினை வாங்கி மஞ்சள் சந்தனம், குங்குமம் வைத்து கருப்பு கம்பளி கயிற்றில் கட்டித் தொங்கவிட்டால் கண் திருஷ்டி நீங்கும்.
Comments
Post a Comment