வாஸ்து
நம் வீட்டின் தெற்கு மற்றும் மேற்கு பகுதியில் காலியிடங்கள் வந்தால் நன்கு ஆராய்ந்து தான் வாங்க வேண்டும்.இல்லாவிட்டால் தீமையுண்டாகும். படுக்கையறை கிழக்கு பகுதியில் இருக்க கூடாதுங்க. கிழக்கு பகுதியில் படுக்கையறை பெண் குழந்தைகளை உருவாக்கும்.
வீட்டின் தென்மேற்கு சேமிப்பு அறை, படுக்கை அறை, பீரோ, பெட்டி வைக்கவும். வீட்டின் தெற்கில் படுக்கை அறை இருப்பது நல்லது. வீட்டின் தென்கிழக்கில் தான் சமையல் கிழக்கே பார்த்து சமைக்கும் படியாக இருத்தல் வேண்டும்.
வீட்டில் சாப்பிடுமிடம் மேற்கிலும் சாப்பிடும் போது கிழக்கு திசை பார்த்து சாப்பிட வேண்டும். வீட்டின் வடமேற்கில் தான் தானியக் கிடங்கு இருத்தல் வேண்டும்.
வீட்டின் நடுவில் சந்திப்புக் கூடம் இருத்தல் வேண்டும். வீட்டின் உள்ளே சூரிய ஒளி விழுதல் மிக மிக உயர்வானது. வீட்டு எஜமானன் நீடித்த ஆயுளோடு இருக்க மனைப் பொருத்தத்தில் சூத்திரத்திப் பொருத்தத்தில் மரண சூத்திரம் வரக்கூடாது.
வீட்டின் பூஜையறை வடகிழக்கு மூலையில் எட்டு அடிக்குறையாமல் வடக்கிலும், கிழக்கிலும் பெரிய ஜன்னல்களுடனும் பூஜையறையின் கதவுகள் உச்சஸ்தானத்தில் காற்று வந்துசெல்வதற்கு ஏதுவாக மணிகள் பொருத்தப்பட்ட துளைகளையுடையதாக இருப்பது மிகுந்த சிறப்பைத்தரும். அவ்வாறு அமைக்கமுடியாதபச்சத்தில் வடக்கு மத்தியப்பகுதில் அமைக்கலாம்.
வாகனங்கள் நிறுத்தும் கொட்டகையை வீட்டின் வடமேற்கு வடக்கு மற்றும் தென்கிழக்கு கிழக்கு பகுதிகளில் தாய் மற்றும் தந்தை சுவர்களை தொடாதவாறு நீச்சபகுதிகளில் மட்டும்தான் அமைக்கவேண்டும். ஆனால் அதற்காக அமைக்கப்படும் வாயிலானது உச்சப்பகுதிகளில் மட்டும்தான் அமைக்கவேண்டும்.
சுய தொழிலா அல்லது மாத சம்பளமா?
சொந்தமாக தொழில் செய்வோர் வீட்டில் வடமேற்கு பகுதியும் தெற்கு நடுப்பகுதியும் சரியாக இருக்க வேண்டும். இது ரெண்டும் தவறாக இருக்கும் பட்சத்தில் மாத சம்பளத்திற்கு செல்வது நல்லது. வடமேற்கு பகுதியும் தெற்கு நடுப்பகுதியும் தவறாக இருக்கும் பட்சத்தில் சுயதொழில் மிகப்பெரிய நஷ்டம் ஏற்பட்டு மீளமுடியாத கடன் சுமை ஏற்பட்டு விடுகிறது
வடமேற்கு, மேற்கு பகுதியில் பருமனான தென்னைமரம், மாமரம் போன்ற மரங்களை வளர்க்கலாம்.
Comments
Post a Comment