பல்லி உடலில் எங்கு விழுந்தால் என்னென்ன பலன்கள்.
நம் நாட்டில் பல சாஸ்திர சம்பிரதாயங்கள் உள்ளது. காக்கை நம் வீட்டின் முன் அமர்ந்து சத்தம் போட்டால் உறவினர்கள் வருவார்கள் .காக்கைக்கு உணவு வைப்பதும் நம் முன்னோருக்கு உணவு அளிப்பதற்கு சமம் இது போன்ற பல சாஸ்திர விதிமுறைகளை கடைப்பிடிக்கிறோம். அதுபோல் பல்லி நம் உடம்பின் மீது விழுவதை வைத்து பலன்களை நம் முன்னோர்கள் கணித்து வைத்து கூறியிருக்கிறார்கள். அனைவரது வீட்டிலும் இருக்கக்கூடிய தான் இந்த பல்லி நம் மீது பத்து இடங்களில் விழுவதால் ஏற்படக்கூடிய பலன்கள் என்ன என்பதை விரிவாக பார்க்கலாம். பல்லி விழுவதால் ஏற்படும் பலன்கள் தலையில் விழுந்தால்… பல்லி தலையில் விழுந்தால் அவருக்கு வர இருக்கும் கெட்ட நேரத்தை அது குறிக்கிறது. அவரின் கெட்ட நேரத்தை சமாளிக்க பல்லி சொல்லும் எச்சரிக்கையை நாம் அனுசரித்து போவது மிகவும் நல்லது. அதுபோல பல்லி தலையில் விழுவதால் கடும் எதிர்ப்பு, மனநிம்மதி இல்லாமை ஏற்படும். தலையில் பல்லி விழுவதால் அவரை உறவினரோ அல்லது தெரிந்தவர் மரணமடையலாம். இதனால் மன அமைதி இழந்து இருப்பர் இது போன்ற கெட்ட சகுனம் பல்லி தலையில் விழுவதன் மூலம் ஏற்படலாம். நெற்றியி...