தடைகள் நீங்கி பணம் கொழிக்க சில வழிகள்.

எவ்வளவு முயற்சி செய்தாலும் சேர்த்து வைத்த பணம் எப்படி போகிறது என்று தெரியவில்லை என்று  புலம்புவது  இன்று எல்லோர் வீட்டிலும் வாடிக்கையாக நிகழக்கூடிய ஒன்றாகிவிட்டது.

என்றாவது சிந்தித்து பார்த்திருக்கிறார்களா? ஏன் இவ்வளவு கஷ்டப்பட்டு நாம் சம்பாதித்த பணம் நம் கையில் விட்டு மிக விரைவாக செல்கிறது என்று? அப்படி சம்பாதித்த பணம் உங்கள் வீட்டிலேயே செழிக்க வேண்டுமென்றால் அதற்கு என்ன செய்யலாம் என்பதைப் பற்றி இப்போது கூறுகிறேன் அதைப் பின்பற்றினால் போதும் உங்கள் வீட்டில் லக்ஷ்மி கடாட்சம்  இருக்கும்.

வீட்டு அண்டி இருக்கக்கூடிய தரித்திரத்தை விரட்ட மாட்டின் கோமியத்தை கொண்டு வீடு முழுவதும் தெளித்து சுத்தப்படுத்துவதும் அந்த கோமியத்தின் சில துளிகள் நீரில் கலந்து நீங்கள் குளித்து வந்தால் வீட்டில் உள்ள தரித்திரமும் உங்களைப் பிடித்துள்ள தரித்திரமும் விரைவில் விலகி பணம் நிரந்தரமாக வீட்டில் தங்கும்.

பறவைகளுக்கு தினமும்  உணவளித்தல் மூலம் உங்கள் வீட்டில் உள்ள கெட்ட சக்தி வெளியேறி நல்ல சக்தி குடியேறும் இதன் மூலம் பணம் நிரந்தரமாக உங்கள் வீட்டில் தங்க வாய்ப்புக்கள் நிறைய ஏற்படும்.

வீட்டில் நேர்மறையான சிந்தனையைத் தூண்டக்கூடிய நல்ல வார்த்தைகளைப் பேசி வருதல் மற்றும் குளிப்பதற்கு முன் தயிரை சிறிது முகத்தில் தேய்த்து குளிப்பதனால் பணம் உங்கள் வீட்டில் நிலைத்து நிற்கும்.

வெள்ளி, செவ்வாய்க்கிழமைகளில் வீட்டில் பெண்கள் விளக்கேற்றி தெய்வத்தை பூஜை  செய்பவர்களும் குலதெய்வ வழிபாடும் இருந்தால் செல்வ செழிப்பு கூடுதலாகும்.

வெள்ளிக்கிழமை பிறந்த பெண்கள் தங்கள் கையில் வெள்ளி மோதிரத்தை அணிந்து கொள்வதால் வீட்டில் செல்வாக்கும் செல்வமும் பெருகும்.

இறந்து போன முன்னோர்களின் ஆத்மாவை திருப்தி செய்யும் வகையில் அவர்கள் இறந்த தினங்களில் அவர்களுக்கு உணவளித்து வந்தால் வீட்டில் எந்தவித சிரமும் அண்டாது. மேலும் அவர்களின் ஆசீர்வாதம் குடும்ப உறுப்பினர்கள் அனைவருக்கும் கிட்டும் இதன் மூலம் செல்வம் கொழிக்கும்.

அடுத்தவர்களுக்கு துரோகத்தை மனதளவிலும் நினைக்காமல் நன்மை செய்து வந்தாலே போதும். குலதெய்வ கோயிலுக்குச் சென்று வந்த பலன் நமக்குக் கிடைக்கும். அனைத்தையும் நீங்கள் கடைபிடித்து வரும் பொழுது உங்களுக்கு பணத்தட்டுப்பாடு என்பதே ஏற்படாது செல்வமும்  மிகுதியாக கிட்டும் நிலைத்து நிற்கும்.

Comments

Popular posts from this blog

சந்திர கிரகணத்தின் போது செய்யக்கூடாத செயல்கள்.

" அஸ்வினி முதல் மகம் வரை இந்த தொழில் சூப்பரா செட் ஆகுமாம்..!" - அது பற்றி பார்க்கலாமா..!

படுக்கை அறையில் ஜன்னல்கள் வாஸ்து முறையில் எங்கு வைப்பது நல்லது.