அமாவாசையன்று வாகனங்கள் வாங்கக் கூடாது ஏன்?
அமாவாசையில் வாகனங்கள் ஏன் வாங்கக் கூடாது எனபதற்கு காரணம் உங்களுக்கு தெரியுமா.அதைப் பற்றி இந்த விரிவாக நீங்கள் விளக்கமாக படிக்கலாம்.
பஞ்சாங்கத்தில் நேத்திரம் ,ஜீவன் என்ற கணக்கு ஒன்று உண்டு. அதாவது கண்கள் உயிர் எனப்பொருள்படும். எனவே நேத்திரம் என்றால் கண் என்று பொருள். இது பஞ்சாங்கத்தில் இரண்டு ,ஒன்று, ஒன்று, பூஜ்ஜியம் என்ற வரிசையில் தினசரி குறிக்கப்பட்டிருக்கும்.
அம்மாவாசை தினத்தில் மட்டும் இவை பூஜ்ஜியம் பூஜ்ஜியம் என குறிக்கப்பட்டிருக்கும். எனவே அம்மாவாசை நேத்திர, ஜீவன் இல்லாத நாளாகும் .
அதாவது கண்களும் உயிரும் இல்லாத நாள் தான் அம்மாவாசை என்று முன்னோர் கூறியிருக்கிறார்கள்.
நேத்திர, ஜீவன் இல்லாத நாளில் தொடங்கும் காரியம் தோல்வியில் அடையும். வாங்கும் பொருட்கள் நிலைக்காது, விபத்து உண்டாகும்.
எனவே கண்ணில்லாத அமாவாசை தினத்தில் கோயிலில் வழிபடலாமே தவிர வாகனங்களை வாங்கி பூஜை போடுதல் தவறு என கூறப்படுகிறது .
அப்படி வாங்கினாலும், நிலைக்காது. விபத்தை உண்டாக்கும் கண்ணில்லாமல் வண்டி ஓட்டுவதை போன்றது. முன்னோர்களுக்கு உரிய வழிபாட்டினை மேற்கொள்ள சிறப்பான நாள் அமாவாசை .அந்த நாளில் முன்னோர்களை நினைத்து புனித நீரில் தர்ப்பணங்கள் செய்து தோஷங்களை நீக்கி கொண்டு முன்னோர்களின் ஆசியை பெறவேண்டும் என்று தர்ம நூல்கள் கூறுகிறது .
அமாவாசைகளில் ஆடி, புரட்டாசி அமாவாசை மிகவும் சிறப்பானவை. அம்மாவாசை நாளில் புதிய வீட்டில் பால் காய்ச்சுதல், கிரகப் பிரவேசம், திருமணம் சார்ந்த நிகழ்வுகள் ,நிச்சயதார்த்தம், புதிய தொழில்கள் தொடங்குதல், குழந்தையின் முதல் முதலில் பள்ளியில் சேர்த்தல் போன்றவற்றை செய்யவே கூடாது.
இப்போது உங்களுக்கு நன்கு புரிந்திருக்கும் என்று நினைக்கிறேன்.ஏன் அமாவாசையில் வாகனங்கள் வாங்கக் கூடாது என்று.
Comments
Post a Comment