" அஸ்வினி முதல் மகம் வரை இந்த தொழில் சூப்பரா செட் ஆகுமாம்..!" - அது பற்றி பார்க்கலாமா..!
இந்து மதத்தில் ஒரு குழந்தை பிறந்ததுமே பிறந்த நேரத்தை அடிப்படையாகக் கொண்டு அதற்கு ஜாதகத்தை கணித்து விடுவார்கள். அப்படி ஜாதகம் கணிக்கும்போது அந்த குழந்தைக்கே உரிய ராசி மற்றும் நட்சத்திரங்கள் அதில் தெளிவாக விளக்கப்பட்டிருக்கும்.
மேலும் ஜோதிட கலையை பொருத்தவரை 27 நட்சத்திரங்களுக்கு என்று தனித்தனியாக தொழில் அமையும் என்று கூறி இருக்கிறார்கள். அப்படி ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் என்னென்ன தொழில் அமைந்தால் சிறப்பாக இருக்கும் என்பதை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.
அஸ்வினி நட்சத்திரம்
அஸ்வினி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மருத்துவ அறிவு நிரம்பியவர்கள். இவர்கள் வேதியியல் துறை, நீர் சுத்திகரிப்பு, காவல்துறை, ராணுவத்துறை, கட்டிட தொழில், பொறியியல் தொழில், உடற்கல்வி ஆசிரியர் போன்ற பணிகளை மேற்கொள்வதன் மூலம் சிறப்பாக வாழ முடியும்.
பரணி நட்சத்திரம்
பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மகப்பேறு மருத்துவர்கள், பதிவாளர், ஹோட்டல் துறை, இறைச்சி துறை, தேயிலை, கால்நடை, திரைத்துறை, பொழுதுபோக்கு சாதனங்களின் விற்பனையாளராக செயல்படுதல் போன்ற பணிகளில் சிறப்பாக இருப்பார்கள்.
கார்த்திகை நட்சத்திரம்
கார்த்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தையல் தொழில், எம்ராய்டிங், ப்யூட்டிஷியன், கூர்மையான ஆயுதங்கள் தயாரிப்பு, கண்ணாடி உற்பத்தி, வங்கி, பத்திர வியாபாரம் போன்றவற்றில் சிறப்பாக இருப்பார்கள்.
ரோகிணி நட்சத்திரம்
ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பைலட், உணவு பதப்படுத்துதல், அறிவியல் ஆசிரியர், பூ விற்பனையாளர், மீன் விற்பனையாளர், இசை, நடனம் போன்றவற்றில் சிறப்பாக இருப்பார்கள்.
மிருகசீரிடம் நட்சத்திரம்
மிருகசீரிடம் இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் ரியல் எஸ்டேட், பத்திரப்பதிவு, , ஜவுளித்துறை, கதாசிரியர், மொழி ஆராய்ச்சியாளராக விளங்குவார்கள்.
திருவாதிரை நட்சத்திரம்
திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் உயிரியல் துறையில் சிறப்பாக இருப்பதோடு சிறந்த எழுத்தாளராகவும், நகைச்சுவை நடிகராகவும், போட்டோ ஸ்டுடியோ, மின் பொறியாளர் போன்ற பணிகளை மேற்கொள்வார்கள்.
புனர்பூச நட்சத்திரம்
புனர்பூசம் இவர்கள் வங்கி, கணிதம்,ஹோமியோபதி, சிவில், இன்ஜினியரிங் நடிப்பு போன்ற துறைகளில் சிறப்பாக இருப்பார்கள்.
பூச நட்சத்திரம்
பூச நட்சத்திரத்தை சார்ந்தவர்கள் அரசியல், ரியல் எஸ்டேட், அரிசி, கோதுமை, பலசரக்கு விற்பனை, ஆன்மீகம், பாரம்பரிய மருத்துவத்தில் சிறப்புடன் திகழ்வார்கள்.
ஆயில்ய நட்சத்திரம்
ஆயில்யம் நட்சத்திரத்தை சேர்ந்தவர்கள் யோகா, வக்கீல், மெடிக்கல், மருந்து பொருட்கள், தொழிற்சாலை, ஆயுர்வேதம், வணிகம் போன்றவற்றில் சிறப்பாக செயல்படுவார்கள்
மக நட்சத்திரம்
மக நட்சத்திரத்தை சேர்ந்தவர்கள் ராணுவம், ஆன்மீக நூல்கள், மின்னணு பொருட்கள், நீதிபதிகள், வரலாற்று ஆசிரியர், மேலாளர் கால்பந்து விளையாட்டாளர் போன்ற தொழில்களில் சிறப்பாக இருப்பார்கள்.
Comments
Post a Comment